மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயத்தால் மகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்: சப்-இன்ஸ்பெக்டர் மனைவிக்கே இந்த கதியா..?!
சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி ரேடியோ பார்க் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் நாமக்கல் மாவட்டத்தில் நுண்ணறிவு பிரிவில் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா (31). இவர்களுக்கு வித்தேஷ் (7) என்ற மகனும், நித்திஷா (3) என்ற மகளும் உள்ளனர். வித்தேஷ் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல் மணிகண்டன் பணிக்கு சென்றுள்ளார். வித்தேஷ் பள்ளிக்கு சென்றுள்ளார். வீட்டில் அனிதாவுடன் நித்திஷாவும் மட்டும் இருந்துள்ளார். இந்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் மணிகண்டன் பணி முடிவடைந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டின் கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் மணிகண்டன்சிறிது நேரம் கதவை தட்டியுள்ளார். அது திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு அனிதா பிணமாக தொங்கினார். மேலும் அதே அறையில் வாயில் நுரையுடன் அவரது மகள் நித்திஷா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.