மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனியாக வாழ்ந்ததால் விரக்தி: விடுப்பில் வந்த ராணுவ வீரர் தூக்குப் போட்டு தற்கொலை..!
விடுப்பில் இருந்த ராணுவ வீரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகேயுள்ள கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவரது மகன் ரகுராமன் (35), இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரைப் பிரிந்து தனியே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ரகுராமன் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான கண்டமங்கலத்தில் வந்து தங்கி இருந்துள்ளார்.
இதற்கிடையில் நேற்று மாலை 3 மணி வரை ரகுராமன் சாப்பிடாமல் அவரது அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை சாப்பிட அழைக்க அவரது தந்தை அறைக்குச் சென்று பார்த்தபோது ரகுராமன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகுராமன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து காட்டுமன்னார்கோவில் துணை ஆய்வாளர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதனால் இந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.