மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ...... விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தைக்கு நேர்ந்த துயர முடிவு.!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் குழாயில் தடுக்கி விழுந்த மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கீழமஞ்சி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் இவருக்கு திருமணமாகி 3 வயதில் தயா ஸ்ரீ என்ற மகள் இருந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கணேசன் கூலி வேலைக்கு சென்று விட்டார் அவரது மனைவி மளிகை கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். கணேசனின் தாயாரும் பூ கட்டும் வேலைக்கு சென்று விட்டதால் இவர்களது மகள் வடக்கு தெருவில் சென்று விளையாடி இருக்கிறார்.
சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த தயாஸ்ரீ குடிநீர் குழாயைத் தாண்டி விளையாடும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை மீட்டாக்கம் பக்கத்தினர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்படும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.