மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அபிராமி சிறையில் மகிழ்ச்சியா?. நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!.
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது.
இதனையடுத்து போலீஸார் அபிராமி, சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது அபிராமி கள்ளக்காதலனுக்காக வாழ்க்கையையே இழந்துவிட்டோமே என வருத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
நேற்றைய தினம் கள்ளக்காதல் செய்வது குற்றமில்லை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்த செய்தியை அறிந்த அபிராமிக்கு தன்னை விடுதலை செய்துவிடுவார்களோ என்ற என்னம் உருவாயிருக்கலாம் என கூறுகின்றனர். ஆனால் அவர் இளம் குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக சிறைக்கு சென்றதால் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் என கூறுகின்றனர்.