மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கன்டெய்னர் லாரியில் மளமளவென எறிந்த தீ! 20 க்கும் மேற்பட்ட குளிர்சாதனப்பெட்டிகள் எரிந்து நாசம்!
சென்னை மேடவாக்கம் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடைக்கு வினியோகம் செய்வதற்காக பிரபல நிறுவனத்தின் 50 குளிர்சாதனப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கன்டெய்னர் லாரி மடிப்பாக்கம் கணேஷ்நகர் அருகே சென்றபோது, சாலையின் மேலே உள்ள மின்கம்பியில் உரசி கன்டெய்னர் தீப்பிடித்து எரிந்தது.
இதனையடுத்து கன்டெய்னரில் இருந்து புகைமூட்டம் கிளம்பியுள்ளது. இதனிப்பார்த்த கன்டெய்னர் டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தினர். இது பற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கன்டெய்னரில் எரிந்த தீயை அணைத்தனர். அனாலும் கன்டெய்னரில் இருந்த 20 பிரிட்ஜ்கள் முற்றிலும் எரிந்தது.
கொழுந்துவிட்டு எறிந்த தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன், தீயில் சேதம் அடையாத மற்ற குளிர்சாதனப்பெட்டிகளை கன்டெய்னரில் இருந்து கீழே இறக்கி சாலையோரம் வைத்தனர். இதில் பதற்றமடைந்த கன்டெய்னர் லாரி டிரைவர், கிளீனர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.