மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கதக் கற்கும் நடிகை அசினின் மகள்! நல்லா வளர்ந்து இப்போ எப்படியிருக்கார் பார்த்தீர்களா! வைரலாகும் அழகிய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து நடிகை அசின் கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம், காவலன் என பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் முன்னணி நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டு பாலிவுட் சினிமாவிற்கு சென்ற அவர் 2016ம் ஆண்டு ராகுல் சர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் அரின் என்ற மகள் உள்ளார்.
நடிகை அசின் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது மகளின் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது மூன்று வயதாகும் தனது மகள் கதக் நடனம் கற்றுக் கொண்டதாகக் கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகள் நன்கு வளர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நடிகை அசினின் குழந்தைக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.