நடிகை சித்ரா மரணம்... தொடரும் மர்மம்... காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..



Actress Chithra suicide case next update

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. சித்ரா என்ற இவரின் இயற்பெயரைக்கூட மறந்து முல்லை என்ற இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பெரியளவில் இடம் பிடித்தது.

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா சமீபத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவருடன் சமீபத்தில் திருமணம் முடிந்தநிலையில் கணவன் மற்றும் சித்ராவின் தாயார் கொடுத்த மனஅழுத்தமே சித்ரா தற்கொலை செய்துகொள்ள காரணம் என காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

VJ Chithra

இருப்பினும் சித்ராவின் தற்கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். சித்ராவுடன் பணியாற்றிய சக நடிகர்கள், நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோரிடம் காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது.

அதேபோல் சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடமும் நாளை ஆர்டிஓ விசாரணை தொடங்க உள்ளது. சித்ராவின் இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் சித்ரா தற்கொலை வழக்கு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். ஆதாரங்களை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.