அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
Breaking: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 3 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 180 பேருக்கு மேல் தொற்றியுள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் நேற்று வரை 3 பேராக இருந்த கொரோனா தொற்று இன்று 6 ஆக உயர்ந்துள்ளது. இதில் முதல் நபர் குணமடைந்துவிட்டார் என்பது ஆறுதலான செய்தி.
இன்று கண்டறியப்பட்ட 3 பேர்களில் 2 பேர் தாய்லாந்து மற்றும் ஒருவர் நியூசிலாந்தில் இருந்து வந்தவர் என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் கண்டறியப்பட்ட 6 பேருமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதனை தொடர்ந்து தமிழத்தின் ரெயில், உள் மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்கள், எல்லைகள் ஆகியவற்றில் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
#coronaupdate: 3 positive cases confirmed, 2 Thai nationals & 1 from New Zealand.Patients are undergoing treatment in isolation. @MoHFW_INDIA #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 21, 2020
#Corona:All 6 +ve cases are imported cases from diff regions with travel histories & not community transmitted. New cases were already quarantined & in our radar.Screening is more intensified at all ports of arrival incl Railway,dom.arrivals & interstate borders. #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 21, 2020