#Breaking# அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தில் மரணம்!!



admk-mp-died


விழுப்புரம் மாவட்டம்  அதிமுக எம்.பி ராஜேந்திரன் தனது வீட்டில் இருந்து காரில் சென்னைக்கு சென்றுள்ளார். காரில் ஓட்டுநர், எம்.பி ராஜேந்திரன், மற்றுமொருவர் என மூவரும் சென்றுகொண்டிருந்தனர்.
.
அப்போது அவர்கள் சென்ற கார் திண்டிவனம் அருகே சென்றிக்கொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற வாகனம் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி கடும் விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்தவர்கக்ள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ADMk MP

 அந்த காரின் ஓட்டுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரனுடன் வந்த மற்றொருவரும்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.