மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுரையை தொடர்ந்து தேனியிலும் முழு ஊரடங்கு உத்தரவு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தியதால் சென்னையில் இருந்து அதிகளவில் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால், தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது.
இதேபோன்று மேலும் ஒரு சில மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய நகராட்சி பகுதிகள் மற்றும் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் முழு பொதுமுடக்கத்தை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பிறப்பித்துள்ளார்.
இதனால் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் பகுதிகளில் டீ கடைகள், பேக்கரிகள், நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள், பெட்டிக்கடைகள், பர்னிச்சர் கடைகள் இயங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.