மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே வார்டுக்கு கவுன்சிலராக போட்டிபோடும் Ex எம்.எல்.ஏ-வின் மகள், மருமகள்..! அதிமுக Vs பாஜக சம்பவம்.!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தனது முதல் மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்கிறது. முதல் மேயர் பொறுப்புகளை கைப்பற்ற திமுக, அதிமுக, பாஜக இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியமைத்து நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக தனித்தனியே களமிறங்கும் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியானது. அதன்படி, 11 ஆவது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீ லிஜா வேட்பாளராக களமிறங்குகிறார். பாஜக நாகர்கோவில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியான நிலையில், 11 ஆவது வார்டுக்கு திவ்யா சிவராம் வேட்பாளராக களம்காண்கிறார்.
திவ்யா சிவராம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகசனின் மருமகளும், அதிமுக வேட்பாளர் ஸ்ரீ லிஜாவின் நாத்தனார் ஆவார்கள். இதனால் அதிமுக சார்பில் நாஞ்சில் முருகேசனின் மகள், பாஜக சார்பில் மருமகள் ஆகியோர் ஒரே வார்டில் களமிறங்கி இருக்கின்றனர்.