மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. உங்க குழந்தைக்கு அழுதா கிரேப் வாட்டர் கொடுக்குறீங்களா?... புற்றுநோய்க்கு வழிவகை செய்யும் - எய்ம்ஸ் மருத்துவர் பேரதிர்ச்சி தகவல்.!
பச்சிளம் குழந்தைகளுக்கு 5 வயதுவரை தாய்மார்கள் கொடுக்கும் கிரேப் வாட்டர் அவர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு கிரேப் வாட்டர் கொடுப்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர் அருண்பாபு திருநாவுக்கரசு தெரிவிக்கையில், "2022ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலைமையிலும் குழந்தைகளுக்கு கிரேப் வாட்டர் கொடுக்கும் பழக்கம் என்பது மாறவில்லை. பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகள் அழுதால் கிரேப் வாட்டர் கொடுக்கிறார்கள். இது குழந்தைகளின் உடல்நலத்தை மோசமாக்கும்.
கிரேப் வாட்டரில் இருக்கும் பிரைன்போல் என்ற ரசாயனம் நச்சுத்தன்மை கொண்டது. புற்றுநோயை ஏற்படுத்தலாம். குழந்தைகளுக்கு கிரேப் வாட்டர் கொடுப்பது உங்களின் குழந்தைகளுக்கு விஷம் கொடுப்பதற்கு சமம். இந்த மருந்து பல நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில், நம்மூர் விளம்பரதாரர்கள் முயற்சியால் இன்று வரை அது விற்பனையாகி வருகிறது. விளம்பர மாயையை மக்கள் நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.