எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என கூறிய திண்டுக்கல் சீனிவாசன்.! எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்!



amaichar-jeyakumar-talk-about-thindukal-seenivasan

தற்போது அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்கின்ற போட்டி கடுமையான ஏற்பட்டுள்ளதால், அதிமுகவில் நடந்து வரும் மோதல்கள் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஓபிஎஸ் மற்றும்  ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே இருந்துவருகிறது. முதல்வர் வேட்பாளராக முன்னணி நிர்வாகிகள் பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்த விரும்பி வருகின்றனர்.

தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எவ்விதமான குழப்பமும் இல்லை என தெரிவித்திருந்தார்.

ops

இந்தநிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது. அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான். அமைச்சர்களும், தொண்டர்களும் அதிமுகவில் சர்ச்சை உருவாவதற்கு இடம் அளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.