வரதட்சனை கொடுமையா.? தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்.?



an-young-woman-commits-suicide-her-parents-complaint-ab

கரூர் அருகே திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளேயான நிலையில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது  கணவரின் குடும்பத்தார் தான் அந்த பெண்ணை வரதட்சணை காரணமாக கொலை செய்து விட்டார்கள் என பெண்ணின் தந்தை  காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தைச் சார்ந்த  நாகராஜன் மகள் கீதா என்பவருக்கும்  கரூர் மாவட்டம் தும்பிவாடியை  சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் வேலாயுதம் என்ற கெளதமிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

Karur

பொறியியல் பட்டதாரியான கௌதம்  சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் திருமணத்திற்கு பின்பு தான் தெரிந்திருக்கிறது கௌதம் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்று. மேலும் அவர் அடிக்கடி வரதட்சனை கேட்டு கீதாவை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். கீதாவின் தந்தையும் தன்னால் முடிந்த அளவு 5 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.

கீதா தனது தங்கையின் திருமணத்திற்காக சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். அப்போது அவரை அழைத்து வரச் சென்ற கௌதம் இரண்டு லட்ச ரூபாய் கேட்டுள்ளார் . பணம் இல்லை என்று கூறி இருக்கின்றனர் கீதாவின் பெற்றோர். இதனால் அவரை அழைத்துக் கொண்டு புன்னம் சத்திரம் கிராமத்திற்கு வந்திருக்கிறார் கௌதம். இந்நிலையில் நேற்று இரவு கௌதமின் தம்பி கீதாவின் தாயாருக்கு போன் செய்து கீதா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பதறியாவரது பெற்றோர் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது அங்கு பிணவறையில் கீதாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக கீதாவின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். கௌதம் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டால் தான்  பிணத்தை வாங்குவோம் எனக் கூறி மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.