சென்னையில் வெயில் தாங்க முடியாமல் மண்வீடு கட்ட ஆள் தேடும் கிரிக்கெட் வீரர்! விவரம் உள்ளே



Aswin looking for people to build mud house

இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு மண்வீடு கட்டுவதற்கு ஆள் வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடியவர் ரவிச்சந்திரன் அஸ்வின். சுழற்பந்து வீச்சாளரான இவர் பலதரப்பட்ட பந்துவீச்சு திறமையால் எதிரணியினரை திணறடிக்கும் வல்லமை கொண்டவர். 

Ravichandran aswin

பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறந்து விளங்கிய இவர் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். சென்னையில் வளர்ந்தவரான அஸ்வினின் பூர்வீகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த திருவெண்காடு கிராமம் ஆகும். 

எனவே கிராமத்து வாசணை நன்கு அறிந்த அஸ்வினுக்கு சென்னையில் கிராமத்தில் உள்ளது போலவே ஒரு மண்வீடு கட்டவேண்டும் என்ற ஆசை இருக்கும் போல. எனவே தனது ட்விட்டர் பக்கத்தில் "சென்னையில் மண்வீடு கட்டுவதற்கு யாரேனும் ஆட்கள் உள்ளனரா?" என கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் அடிக்கும் வெயிலில் உண்மையில் வீடுகளுக்குள் நிம்மதியாக உறங்க முடியவில்லை. பல லட்சம் செலவு செய்து வீடு கட்டினாலும் ஏசி போட்டால் தான் தூங்கவே முடியும் நிலை உருவாகிவிட்டது. ஆனால் கிராமங்களில் சில ஆயிரங்களே செலவு செய்து மண்வீடுகளை கட்டி மேலே குடிசை போட்டு பலர் நிம்மதியாக தூங்குகின்றனர். 

Ravichandran aswin

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் தற்போது அந்த மண் வீட்டில் வாழ வேண்டும் என தோன்றியுள்ளது போல. அதைப்போன்று மண்வீடுகளை கட்ட தெரிந்தவர்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தால் அஸ்வினின் ட்விட்டரில் கமெண்ட் செய்யுங்கள். இதனை பகிர்வதன் மூலம் நமது பாரம்பர்ய வீடுகளை கட்ட தெரிந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.