மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. பக்தர் போல் வேடம்.. தொடர் திருட்டில் ஈடுபட்டு பங்களா கட்டிய பலே திருடி.. கைதான பரபரப்பு சம்பவம்..!
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருபவர் பெருமாள் பிரபு - சித்ரா பிரபா தம்பதியினர். சித்ரா பிரபா தனது சகோதரியுடன் பேருந்தில் பயணம் செய்து பூ மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்ட ஒரு இளம் பெண் சித்ரா பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சித்ரா பிரிபா அலறி சத்தம் போடவே அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அந்த இளம் பெண்ணை மடக்கி பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் செயின் திருட்டில் ஈடுபட்ட இளம் பெண் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியில் வசித்து வரும் வடிவேல் என்பவரின் மனைவி சத்யா என்பது தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சத்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் திருவிழா தேதிகளை தெரிந்து கொண்டு மக்கள் அதிகம் உள்ள இடத்திற்கு முன்கூட்டியே சென்று தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் மேலும் அந்த நகைகளை கொண்டு தங்களது சொந்த ஊரில் சொகுசு பங்களா ஒன்று கட்டி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சத்யா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.