மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5-வது மாடி பால்கனியில் இருந்து கீழே தவறி விழுந்த 8 மாத குழந்தை! அதிஷ்டவசமாக உயிர் தப்பியது!
சென்னை தங்கசாலை பகுதியை சேர்ந்த மெய்பால் என்பவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கும் நீலம் என்ற பெண்ணிற்கும் திருமணமான நிலையில், இந்த தம்பதியினருக்கு 8 மாதத்தில் திநிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த தம்பதியினர் குழந்தையுடன் அப்பகுதியில் இருக்கும், அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் வசித்து வருகின்றனர். மெய்பால், தொழில் விஷயமாக பெங்களூரு சென்றநிலையில் நீலம், தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று மாலை நீலம், சமையல் செய்து கொண்டிருந்தபோது வீட்டின் பால்கனியில் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை திநிஷா, 5-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தது. ஆனால் குழந்தை அதிஷ்டவசமாக அந்த குடியிருப்பின் கீழே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையில் வந்து குழந்தை விழுந்தது.
இதனால் குழந்தைக்கு காலில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதனையடுத்து உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.