மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏலத்தில் அதிரடியாக ஏலம் போன வாழை இலை!! ஒரு கட்டே இவ்வளவு விலையா?!
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் பெரிதும் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளில் முதன்மையாக இருப்பது காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் தான்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் விலை தலையை பிய்த்து கொண்டு ஓடும் அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது. இதனால் மக்கள் தக்காளி இல்லாமலே சமைக்க தொடங்கி விட்டார்கள் என்று கூறப்பட்டது.
பின்னர் சிறிது சிறிதாக தக்காளியின் விலை குறைந்து வருகின்றது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் வாழை இலையானது ஒரு கட்டு ரூ. 1500 வரை ஏலம் போய் உள்ளது.
வாழை இலையின் வரத்து குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் விசேஷ தினங்களுக்கு வாழை இலையின் விலை 1500 ரூபாய்க்கு ஏலம் போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.