மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனுமதி இன்றி அதிமுகவினர் வைத்த பேனர்; இபிஎஸ் - ஓபிஎஸ் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு..!!
அதிமுகவினர், அனுமதியின்றி பேனர் வைத்த வழக்கு, ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவிற்காக அதிமுக சார்பில், பல பகுதிகளில் அனுமதியில்லாமல் பேனர் வைத்ததாக அதிமுகவினர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சிவகங்கை அதிமுக இபிஎஸ் அணியினர் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நகர செயலாளர் ராஜா, வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் ஆகியோர் மீது அனுமதியின்றி பேனர் வைத்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர், கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியின்றி பேனர் வைத்ததால், ஓ.பி.எஸ் தரப்பை சேர்ந்த சேகர் உள்ளிட்டோர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.