மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடையா? சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த பீட்டா..!
தமிழர்கள் வீர விளையாட்டுகளின் மூலம் தங்களது வீரத்தினை வெளிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது. இவ்விளையாட்டிற்கு "ஏறு தழுவுதல்" என்ற வேறு பெயரும் உண்டு. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இவ்விளையாட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட் அமைப்புகள் ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனால் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
மறியல் போராட்டம், மனித சங்கிலி போராட்டம், மௌன போராட்டம் போன்ற போராட்டங்கள் மெரினா கடற்கரையில் நடைபெற்றது.ஆனால் இந்த ஆண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை தடை செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் இன்று ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் கூட்டப்பட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது