மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாஜகவில் இணைகிறார் சசிகலா?.. அரசியலில் தனி ரூட்?? - பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.!
பாஜகவில் சசிகலா இணைந்தால் வரவேற்போம். அது பாஜக வளர்ச்சிக்கு உதவும் என பாஜக எம்.எல்.ஏ பேசினார்.
புதுக்கோட்டையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த திருநெல்வேலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "சசிகலா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தால் நாங்கள் வரவேற்போம். அது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்த சசிகலா, அரசியலில் தான் ஈடுபடப்போவதில்லை என்று அறிக்கை கொடுத்த நிலையில், பல அதிமுக புள்ளிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவும் - அமமுகவும் விரைவில் இணையலாம் என எதிர்பார்த்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.