மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுவனுக்கு திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு.. மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி..!
ஹோட்டலில் வாங்கிய தந்தூரி சிக்கனை சாப்பிட்ட 11 வயதில் சிறுவனுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரத்தில் ஆர்.ஆர்.பிஸ்மி பிரியாணி என்ற உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், உணவகத்தில் இருந்து வாங்கிவரப்பட்ட தந்தூரி சிக்கனை மதன்ராஜ் மற்றும் அவரது 11 வயது மகனான சச்சின் இருவரும் சாப்பிட்டுள்ளனர். உணவருந்திய மறுநாளே சிறுவனுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளான்.
இதனால் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மதன்ராஜ்க்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கையை உறவினர்கள் முன்வைத்துள்ளனர்.