மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலிக்கு செலவு செய்த பணத்தை மீட்டுத் தர கோரி சென்னையில் இளைஞர் வினோத போராட்டம்!
சென்னையில் காதலியால் கைவிடப்பட்ட இளைஞர் ஒருவர் தன் காதலிக்கு செலவு செய்து பணத்தை மீட்டுத் தருமாறு போலீசாரிடம் முறையிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல், மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் விக்கி என்ற கீரிப்புள்ள. இவர் ஒரு மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மதுரவாயல் காவல் நிலையத்திற்கு மதுபோதையில் வந்துள்ளார்.
அப்போது, தான் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலிப்பதாகவும், திடீரென அந்த பெண் தன்னை காதலிக்க மறுப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து, பிளேடால் உடலை அறுத்துக்கொண்டு பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவே நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார்.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், தான் காதலித்த பெண்ணுக்கு 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாகும், அந்தத் தொகையை அந்த பெண்ணிடம் இருந்து வாங்கித் தர வேண்டும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.