மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தண்ணீரை பார்த்ததும் குளிக்கச்சென்ற சிறுவன்.. இறுதியில் நிகழ்ந்த பரிதாபம்.! கண்ணீர் சோகம்.!!
நீர் பாசன கால்வாயில் குளிக்கச்சென்ற சிறுவன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் எண்டபுளிபுதுப்பட்டியை சார்ந்தவர் பிச்சைமணி. இவரின் மகன் கமலேஷ் (வயது 13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது உறவினருடன் வைகை அணை-பெரியாறு பிரதான நீர் பாசன கால்வாயில் குளிக்க சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் கமலேஷ் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விடவே, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு அலறியுள்ளார். இவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை. இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிந்து விசாரணை நடந்து வருகிறது.