மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய இளைஞர்.. விசாரணையில் அம்பலமான உண்மை.!
கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று கொடுமைப்படுத்தி, கர்ப்பமாக்கிய இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குஜிலி பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமன். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் உள்ளார். இந்நிலையில், மாரிமுத்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை யாருக்கும் தெரியாமல் கடத்தி சென்றுள்ளார். மேலும், அந்த சிறுமியை திருமணம் செய்து, அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் தற்போது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், மாரிமுத்து சிறுமியை மிகவும் அடித்து தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். எனவே, இனியும் இதைப் பொறுக்க முடியாது என எண்ணிய சிறுமி இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுமி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது மட்டுமல்லாது அவரை கொடுமைப்படுத்திய உண்மை அம்பலமானது. எனவே, மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்து, மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.