மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியை கிண்டல் செய்த இளைஞரை கோடாரியால் வெட்டிக்கொன்ற காதலன்!
கர்நாடகா மாநிலம் ஹூப்ளி மலைப்பகுதியை சேர்ந்தவர் சாகர். இவர் காதலித்து வரும் இளம் பெண்ணை சுதிர் என்ற இளைஞர் கிண்டல் செய்துள்ளார். இதனையடுத்து அந்த இளம் பெண் தனது காதலரான சாகரிடம் புகார் அளித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த சாகர், சுதிரை தேடி வந்துள்ளார்.
இதனிடையே நேற்று இரவு சுதிர் ஹூப்ளி பகுதியில் உள்ள தாபாவில் இருப்பதாக சாகருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற சாகர், ஏன் என் காதலியை கிண்டல் செய்தாய் என சுதிரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து வெளியே வந்த நிலையில், சாகர் தான் மறைத்து வைத்திருந்த கோடரியால் சுதிரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுதிர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சாகர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைவில் வந்த போலீசார் சுதிரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சாகரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.