மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களில் திமுக முன்னிலை.!
தகமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதனையடுத்து மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின்படி திமுக கூட்டணி 118 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் திமுக 95 இடங்களிலும் காங்கிரஸ் 10, மதிமுக 4, முஸ்லீம் லீக் 2, சிபிஎம் 3, சிபிஐ 2, விசிக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி 83 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 70 இடங்களிலும் பாமக 8, பாஜக 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அமமுக 2 இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. கோவை தொகுதியில் மக்கள் நீதி மையம் முன்னிலை வகிக்கிறது. இந்த முன்னிலை விவரம் காலை 9:45 வரை வெளியான முடிவாகும்.