வீட்டிலிருந்து வெளியேறிய துர்நாற்றம்..! உள்ளே அழுகிய நிலையில் கிடந்த அண்ணன், தங்கை..! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!



Brother and sister dead body recovered from locked house

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அண்ணன், தங்கை இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5-வது பிளாக் 115-வது தெருவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் ஆணின் சடலமும், மற்றொரு அறையில் பெண்ணின் சடலமும் அழுகிய நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.

dead

இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்தவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்பதும் 45 முதல் 50 வயது வரை இருக்கும் இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக அதே வீட்டில் வசித்துவந்ததும், இருவரும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாததும் தெரியவந்துள்ளது.

மேலும், வீட்டுக்குள் சோதனை செய்தபோது சின்னத்திரை நடிகர் சங்கம் அடையாள அட்டை ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனை அடுத்து இரண்டு உடல்களும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இருவரின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.