மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனை இழந்த பெண்ணை துரத்தி துரத்தி வெட்டிய கொழுந்தன்! இதற்காகவா இப்படி.! பகீர் சம்பவம்!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு அருகேயுள்ள நாவலூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் காவேரி. கணவனை இழந்த அவர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், காவேரிக்கும், அவரது கணவரின் சகோதரர் மற்றும் சகோதரிக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் காவேரிக்கும் அவரது கணவரின் சகோதரருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அது கைகலப்பாக மாறிய நிலையில், காவேரியை கணவரின் சகோதரர் அரிவாள்மனையை எடுத்து துரத்தி துரத்தி வெட்டியுள்ளார். அதில் அவரது தலை, தோள்பட்டை பகுதி மற்றும் இரு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர் காவேரியை மீட்டு அருகிலிருந்த வேப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சொத்துக்காக அண்ணன் மனைவியை வாலிபர் துரத்தி துரத்தி வெட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.