அண்ணியுடன் வீட்டிற்குள் உல்லாசமாக இருந்த நபர்... திடீரென உள்ளே நுழைந்த கொழுந்தனால் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!



Brother in law murder his affair person of sister in law

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் - லதா தம்பதியினர். கூலி வேலை செய்து வரும் மணிகண்டனுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் பெண்ணின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார் மணிகண்டன்.

சம்பவத்தினத்தன்று வழக்கம் போல் அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார் மணிகண்டன். இந்நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென வீட்டிற்குள் அந்த பெண்ணின் கொழுந்தன் வேலு நுழைந்துள்ளார்.

Affair

அண்ணியுடன் வேறு ஒரு நபர் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலு அண்ணன் வீட்டில் இல்லாத சமயத்தில் வேறு ஒரு ஆணுடன் என்ன உறவு என கேட்டு சத்தம் போட்டு விட்டு மணிகண்டனை தாக்கி கீழே தள்ளியுள்ளார். அதில் மணிகண்டன் தலையில் பலத்த காயமடைந்த இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். 

அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து லதா போலீசில் புகார் கொடுக்கவே வேலுவை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.