மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த வீட்டை நீயே வச்சுக்கோ.. அண்ணன், தம்பி செய்த தில்லுமுல்லு காரியம்! வளைத்து கட்டிய போலீசார்கள்!!
சென்னை மயிலாப்பூர் பங்காரம்மாள் தெருவில் வசித்து வந்தவர் 49 வயது நிறைந்த கோவிந்தராஜ். இவருக்கு மயிலாப்பூர், சிதம்பரசாமி கோவில் 2வது தெருவில் வசித்து வந்த அண்ணன், தம்பிகளான ரமேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கோவிந்தராஜிடம் தங்களுக்கு சொந்தமான மூன்று அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அடமானத்தில் இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் அதனை மீட்டு அவரையே விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். இதனை நம்பிய கோவிந்தராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 64 லட்ச ரூபாய் பணத்தை ரமேஷ் மற்றும் சுரேஷ் இருவரிடமும் முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுகொண்ட அவர்கள் வீட்டை அவரது பெயருக்கு எழுதி கொடுக்காமல், வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இதனைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சகோதரர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.