மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடக்கம்! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். பெரும்பாலானவர்கள் பண்டிகை நாட்களில் ஊருக்கு செல்ல அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நம்பியுள்ளனர்.
அந்தவகையில், பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பண்டிகை காலங்களில் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் போவது வழக்கம். சென்னை மாதிரியான பெருநகரங்களில் வாழும் மக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதால் பண்டிகை காலங்களில் சென்னை வெறிச்சோடி காணப்படும்.
இந்தவருடம், ஜனவரி மாதம் 14-ந் தேதி போகி பண்டிகை15-ஆம் தேதி தைப்பொங்கல், 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 17-ஆம் தேதி உழவர் தினம் வருகிறது. வார நாட்களில் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையும் அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு பொதுவான விடுமுறையும் வருவதால் 5 நாட்கள் தொடர் விடுமுறைக்கான வாய்ப்பு உள்ளன.
இதனால் தென்மாவட்டங்களை பூர்விகமாக கொண்டவர்கள் தீபாவளிக்கு முன்பே ரயிலில் முன்பதிவை செய்தனர். பலருக்கு ரயிலில் டிக்கெட் கிடைக்காததால் அனைவரும் பேருந்துகளை நம்பியே உள்ளனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கான பேருந்து முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமும், கவுன்ட்டர்களிலும் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.