மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலைத் தடுப்பில் மோதி கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பரிதாப பலி..!
கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியதில், காரில் இருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லதா. இந்த நிலையில், கமலக்கண்ணன் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுடன் லதாவின் அம்மா மற்றும் லதாவின் அண்ணன், கமலக்கண்ணனின் சித்தி இவர்கள் மூவரும் பயணம் செய்தனர். இதனையடுத்து கார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரம்பலூர் விஜயகோபலபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதியுள்ளது.
இதனால் கார் நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து 100 அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில், இந்த விபத்தில் கமலக்கண்ணன் மற்றும் அவரது மனைவியின் தாய் ஆகியோர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் லதா, லதாவின் அண்ணன் மற்றும் கமலக்கண்ணனின் சித்தி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.