மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கால் டாக்சியில் ஒடிபி சொல்ல சற்று தாமதம்.! மனைவி, குழந்தைகள் கண் முன்னே பொறியாளரை அடித்து கொன்ற கார் டிரைவர்.!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உமேந்தர் என்பவர் கோவை மாவட்டத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை கன்னிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்காக குடும்பத்தினர் 7 பேருடன் கால் டாக்சி புக் செய்து சென்றுள்ளனர். படம் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்காக உம்மந்தரின் மனைவியின் சகோதரி செல்போனில் இருந்து ஓலா கார் புக்கிங் செய்துள்ளனர். சிறிது நேரத்தில் கார் வந்ததும் அனைவரும் காரில் ஏறியுள்ளனர். கார் ஓட்டுநர் ஓ.டி.பி எண்ணை சொல்லுமாறு கேட்டுள்ளார்.
அப்போது செல்போனில் உள்ள மெஸேஜில் உள்ள ஓ.டி.பி.யை தேடிபார்ப்பதற்கு சற்று காலதாமதமாகியுள்ளது. இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் ஓ.டி.பி. வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர்கள் ஓ.டி.பி சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணுங்கள் என கூறியுள்ளனர். இந்தநிலையில், பயணிகளுக்கும் ஓட்டுநர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஓட்டுனருக்கும் உமேந்தரக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ரவி உமேந்திரை சரமாரியாக தாக்கியதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து உமேந்தரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன் மூலம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு உமேந்திரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற கார் ஓட்டுநர் ரவியை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.