மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் ஜோடியிடம் பணம் பறிப்பு, பாலியல் சீண்டல்... போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு.!!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் காதல் ஜோடியிடம் போலீஸ்காரர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரர் அராஜகம்
காரைகாலுக்கு அருகே உள்ள திருப்பட்டினம் என்ற இடத்தைச் சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி மனோஜூம் அவரது காதலியும் காரைக்கால் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது பணியில் இருந்த ராஜ்குமார் என்ற காவலர் மனோஜ் மற்றும் அவரது காதலியை மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
பணம் பறிப்பு மற்றும் பாலியல் சீண்டல்
மேலும் எல்லை மீறிய அந்தக் காவலர் மனோஜை மிரட்டி அவரிடமிருந்து ஜிபே மூலம் 3,000 ரூபாய் வசூலித்துள்ளார். மேலும் அந்தக் காவலர் மனோஜின் காதலியிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் மனோஜ் மற்றும் அவரது காதலி கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இன்பச் சுற்றுலா இறுதிச் சுற்றுலாவான சோகம்.. கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி.!
வழக்கு பதிவு
இதனைத் தொடர்ந்து தங்களிடம் அராஜகம் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலீஸ்காரர் ராஜ்குமாருக்கு எதிராக மனோஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையைச் சேர்ந்த நபர் காதலர்களிடம் அநாகரிகமான நடவடிக்கையில் ஈடுபட்டது புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் பயங்கரம்... மனைவியிடம் அத்துமீறிய வட மாநில இளைஞர்.!! கல்லால் அடித்தே கொலை செய்த கணவன்.!!