சார்ஜ் போட்டுக்கொண்டே வீடியோ கால்..! பேசும் போதே வெடித்து சிதறிய செல்போன்.! இளம்பெண்ணின் கண்கள் பாதிப்பு.!



cell-phone-burst-while-speaking-video-call-young-girl-l

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் சுகுமார் தனது 18 வயது மகள் ஆர்த்தியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். ஆர்த்தி தனது செல்போனை சார்ஜில் போட்டுக்கொண்டே தந்தையுடன் பேசியதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஆர்த்தி தனது தந்தையுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தபோது ஆர்த்தியின் கையில் இருந்த செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் செல்போனின் வெடித்த பாகங்கள் ஆர்த்தியின் இரண்டு கண்களிலும் பலமாக தாக்கியுள்ளது.

இதில் வலியால் ஆர்த்தி அலறி துடிக்க உறவினர்கள் அவரை மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆர்த்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடைந்த செல்போனின் துகள்கள் ஆர்த்தியின் கண்ணை பலமாக தாக்கியதில் அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.