மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய செல்போன் சர்வீஸ் கடைக்காரன்.! அக்கா தங்கைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
திருப்பூரைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க சகோதரிகள் இருவருக்கும், கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை குளத்தூரில் செல்போன் சர்வீஸ் கடையில் பணியாற்றி வரும் செந்தில்குமார் (42) என்பவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சகோதரிகள் இருவரையும், செந்தில்குமார் தன்னுடைய ஆசை வார்த்தையால் அவர்களை மயக்கி இருவரிடமும் உல்லாசமாக இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
மேலும், செந்தில்குமார், அவர்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சகோதரிகள் இருவருக்கும் திருமணமான நிலையிலும், செந்தில்குமார் அவர்களை விடவில்லை தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்த சகோதரிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவர்களது கணவன்கள், 2 பேரிடமும் விசாரித்த போது செந்தில்குமாருடன் பேசி வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் 2 பேரையும் அவர்களது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட செந்தில்குமார் வேறொரு செல்போன் நம்பர் மூலம் சகோதரிகளை தொடர்பு கொண்டு வேறு குரலில் பேசி, உங்களது ஆபாச புகைப்படங்கள் என்னிடம் உள்ளது பணம் தராவிட்டால் இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
பின்னர் அதுபற்றி எதுவும் தெரியாதது போல அவர்களிடம் 40 சவரன் நகை, 25 ஆயிரம் பணத்தை வாங்கி மிரட்டிய அந்த நபரிடம் கொடுப்பதாக கூறி சென்றுள்ளார். அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த செந்தில்குமார் மீது சகோதரிகளுக்கு சந்தேகம் வந்ததால் இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் செந்தில்குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போதைய சூழ்நிலையில், பெண்கள் முகம் தெரியாத நபர்களிடம் பேசும் போது மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.