மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம்பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்த நபர்! தட்டிக்கேட்ட பூசாரிக்கு கத்திக்குத்து!
சென்னையில் இளம்பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட பூசாரியை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குமரன் என்ற கோவில் பூசாரிக்கு தெரிந்த இளம்பெண் ஒருவருக்கு, துராப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்ற இளைஞர் செல்போனில் பேசி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த பூசாரி குமரன் தட்டிக்கேட்டுள்ளார்.
இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் குமரனை தங்கராசும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கத்தியால் குதியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த குமரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.