மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இந்தியாவுடன் இணையும் ஆசிய நாடுகள்..!
இந்தியா - மத்திய ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பு உச்சி மாநாடு முதல் முறையாக நடைபெற்றது. காணொளி வாயிலாக நடந்த மாநாட்டை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மேலும், இந்த மாநாட்டில் கஜகஸ்தான் அதிபர் காசம் ஜுமார்ட் தொகையெவ், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் ஷவ்கத் மிர்சியோவ், தஜிகிஸ்தான் அதிபர் ஏமோமாளி ரஹ்மான், துர்மெனிஸ்தான் அதிபர் காற்பங்குலி பெர்டிமுகமதேவ், கிர்கிஸ்தான் அதிபர் சதிர் ஐப்ரோவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
முதலில் உரையாற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் மத்திய ஆசிய நாடுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பு போன்றவற்றை அவசியம் என்று வலியுறுத்தி பேசியிருந்தார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் ரீனத் சந்து தெரிவிக்கையில், "எதிர்வரும் 30 வருடத்திற்கான வரைபடத்தை தயார் செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் தலைவர்கள் 2 வருடங்களுக்கு ஒருமுறை உச்சிமாநாடு கூட்டத்தை நடத்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. உச்சி மாநாடு அடுத்ததாக 2024 ஆம் வருடம் நடைபெறும். ஆப்கானிஸ்தான் குறித்து நெருக்கமான ஆலோசனைகள் தொடர பேசப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் பயங்கரவாதம், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாகவும், கூட்டு போர்பயிற்சிகள் நடத்தவும் பேசப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.