மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 வயதுக்கு சிறுமிக்கு, 2 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை; ஆண்டுவிழாவில் தனியே அழைத்துச்சென்று கொடுமை.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி பகுதியில் தனியார் மீள்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மனைவிகள் பயின்று வருகிறார்கள்.
கடந்த மாதம் 23ம் தேதி பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்ற நிலையில், யு.கே.ஜி பயின்று வரும் 5 வயது சிறுமியை, இரண்டு ஆசிரியர்கள் தங்களுடன் அழைத்துச்சென்று மறைவான பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் சிறுமி ஒருவாரமாக சோர்வுடன் இருக்க, அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஆசிரியர்கள் காயேஷ் குமார் (வயது 50), ராசையா (வயது 29) ஆகியோரின் அதிர்ச்சி செயல் அம்பலமானது.
இவர்கள் இருவரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் வேறு சிறுமிகளையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தனரா? என்று விசாரணை நடந்து வருகிறது.