இன்ஸ்டாவில் பழகி சிறுமியை சீரழித்து, வீடியோ எடுத்து மிரட்டிய கயவன்.. அதிரடியாக ஆப்படித்த சிறுமி.!



Chennai Adyar Minor Girl Rapped by Instagram Friend Police Arrest Pocso Act

சென்னையில் உள்ள அடையாறில் வசித்து வருபவர் கோகுலராஜ் (வயது 22). இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக 15 வயது சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பின்னாளில், சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய நிலையில், சிறுமியின் வீட்டிற்கு அவரின் பெற்றோர்கள் இல்லாத போது சென்றுள்ளார். 

அங்கு, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அவ்வப்போது தனிமையில் சந்தித்து தொடர்ந்து சிறுமியை சீரழித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமி சுதாரித்துக்கொண்ட நிலையில், உல்லாசத்திற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். 

chennai

அப்போது, கொடூரன் கோகுல்ராஜ் "நாம் உல்லாசமாக இருந்த வீடியோ என்னிடம் உள்ளது. அதனை உனது பெற்றோரிடம் காண்பிப்பேன்" என்று மிரட்டி பலாத்காரத்திற்கு வற்புறுத்தி இருக்கிறார். வெகுண்டெழுந்த சிறுமி பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்தி இருக்கிறார்.

மேலும், தனது பெற்றோர் உதவியுடன் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கோகுல்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.