மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பெண் ஊழியர்.. இதுதான் காரணமா?.. சென்னையில் அதிரவைக்கும் சம்பவம்..!
சுடிதாரில் தீப்பற்றியதால் பெண்மணி 3ம் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தனியாரால் நடத்தி வரும் முதியோர் காப்பகம் உள்ளது. அதில் வேலை பார்த்து வரும் பெண் ஜெயந்தி (வயது 35). இவர் காப்பகத்தில் நேற்று இரவு சமையல் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் சுடிதார் துப்பட்டாவில் தீ பிடிக்க தொடங்கியுள்ளது.
இதனைக்கண்ட அந்த பெண் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை, சுடிதார் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அவருக்கு தீயின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தால் ஜெயந்தி கத்தி கூச்சலிட்டுள்ளார். பின் தீயின் தாக்கம் அதிகமானதால், வேறு வழி இல்லாமல் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ஜெயந்தியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அந்தப் பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Note: நாம் சமைக்கும் போது எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களையும் அவ்வப்பொழுது கேஸ் இணைப்பு சரியாக உள்ளதா? கேஸ் ஸ்டவ் சரியாக எரிகிறதா? என நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.