தமிழகத்தையே அதிரவைத்த திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கு.. குழிபறித்த நிர்வாகிகளால் பயங்கரம்.. அதிர்ச்சி திருப்பம்.!



chennai dmk madipakkam selvam murder case latest update

சென்னையில் உள்ள மடிப்பாக்கம், பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). திமுக வட்ட செயலாளரான செல்வம், கடந்த பிப். 1 ஆம் தேதி கூலிப்படையை சேர்ந்தவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து விக்னேஷ், புவனேஸ்வர், கிஷோர், சஞ்சய் மற்றும் விக்கி ஆகிய 5 பேரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அருண் உட்பட 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கூலிப்படை தலைவன் முருகேசன், ரௌடி முத்து சரவணன் ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட, மொத்தமாக 9 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைதாகினர். விசாரணையில், நில ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரத்தில் கொலை நடந்தது உறுதியானது. 

இந்த நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக திமுக 188 ஆவது வட்டத்தின் துணை செயலாளர் குட்டி (வயது 43), திமுக மீனவரணி அமைப்பாளர் சகாய டென்சி (வயது 55), மடிப்பாக்கம் பத்திரப்பதிவு எழுத்தாளர் ஜெயமுருகன் (வயது 42), புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி ரவி (வயது 39) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக ஜெயமுருகன் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலைக்கும் செல்வத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. வட்ட துணை செயலாளர் குட்டிக்கு வட்ட செயலாளர் பதவி ஆசை இருக்கவே, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சகாய டென்சி, ரவி ஆகியோரின் செயலுக்கு செல்வம் இடையூறாக இருந்துள்ளார்.

இதனையடுத்து, செல்வதை தீர்த்துக்கட்ட முத்து சரவணன் மற்றும் முருகேசன் வாயிலாக ரூ.40 இலட்சம் பணம் கொடுத்து கொலை திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடந்ததும் உடன் இருந்த திமுக நிர்வாகிகளே சந்தேகம் கொள்ளாத அளவில் இவர்கள் அனைவரும் நடித்து இருக்கின்றனர். முத்து சரவணனிடம் நடந்த விசாரணையில் மேற்கூறிய தகவல் பெறப்பட்டு, அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.