மக்களே உஷார்.. குளிர்சாதனபெட்டி வெடித்து வீட்டிலிருந்த 3 பேர் உடல்கருகி பலி..!



chennai fridge blast 3 dead

குளிசாதன பேட்டி வெடித்ததில் வீட்டிலிருந்த மூவர் உடல்கருகி பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம், கோதண்டராமன் நகரில் உள்ள கிரிஜா என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக குளிர்சாதனபெட்டி திடீரென வெடித்துள்ளது. இதில் வீட்டிலிருந்த கிரிஜா (வயது 63), அவரது தங்கை ராதா (வயது 55) மற்றும் துபாயில் இருந்துவந்த உறவினர் ராஜ்குமார் (வயது 48) ஆகிய மூவரும் மூச்சுதிணறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

Fridge blast

இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை செய்கையில், ரெஃப்ரிஜிரேட்டர் கம்ப்ரசர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் மூவரும் தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.