வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
தங்கையை அழைத்துச்செல்ல காரில் சென்றவரை இடைமறித்து ரகளை செய்த டூவீலர் புள்ளிங்கோஸ்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
சென்னையில் உள்ள கூடுவாஞ்சேரி அருகே வசித்துவரும் பிரித்வி கிருஷ்ணா என்பவர், கடந்த 17ம் தேதி தனது தங்கையை கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து அழைத்து செல்ல காரில் சென்றுள்ளார்.
அப்போது, அவரின் தங்கையை நோட்டமிட்டு கொண்டு இருந்த ஆசாமிகள், கார் புறப்பட்டதும் இருவரையும் பின்தொடர்ந்து வந்துள்ளனர். மேலும், வாகனத்தை இயக்க விடாமல் தகராறு செய்துள்ளனர்.
மர்ம ஆசாமிகள் செயல்பாடுகள் அனைத்தும் காரில் இருந்த டேஷ் கேமிராவில் பதிவாக, அதனை பிரித்வி விடியோவாக பதிவு செய்துள்ளார். TN19AC8719 மற்றும் TN19AC7583 பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த இளைஞர்கள் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தன்று 10 நிமிடங்களுக்கு உள்ளக காவல் துறையினரின் உதவி கிடைத்துள்ளது. சென்னையின் பிரதான பகுதியில் நடந்த செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
On 17/01/2023 night, after picking up my sister from Guduvancherry Bus Stop, these two individuals were behaving erratically in front of our vehicle. How best to protect ourselves from these kinds of incidents. I request @chennaipolice_ @chennaicorp @ChennaiTraffic to take action pic.twitter.com/DQZnNa0tx7
— prithvi krishna (@prithvik1911) January 18, 2023