"பாப்பா நாங்க சொல்றத செய்" 13 வயது சிறுமியிடம் டீ மாஸ்டர் அத்துமீறிய அவலம்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்ற நபருக்கு குமார் (34 வயது) மகன் இருக்கின்றார். குமார் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் அருகே வேலம்பட்டியில் அமைந்துள்ள டீக்கடை ஒன்றில் மாஸ்டராக பணி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், 13 வயது சிறுமி ஒருவருக்கு குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அவிநாசி பாளையம் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர், குமார் சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்தது உறுதியானது.
இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் குமார் கைது செய்யப்பட்டார். குமார் மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் சூலூரைச் சேர்ந்த சிரஞ்சீவி (19 வயது) மற்றும் அவிநாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் (28 வயது) ஆகியோர் தொடர்பு கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 60 வயது கிழவனை நொறுக்கிய மக்கள்.!
அவர்களையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படத்தில் சிறையில் அடைத்துள்ளனர். மகள் வயதில் இருக்கும் சிறுமியிடம், டீ மாஸ்டர் இப்படி அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக காவல்துறை? சென்னையில் தாய் கண்ணீர் குமுறல்..!