ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
சூப்பரான எளிமையான பூரி மசாலா.. டக்குனு செஞ்சிடலாம்... ரெசிபி இதோ.!
பூரி மசாலாவை எளிமையாகவும், சுவையாகவும் செய்ய இந்த முறையை முயற்சி செய்யுங்கள். நேரமும், வேலையும் மிச்சம். சுவையும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு, பச்சை கடலை பருப்பு - சிறிதளவு,
கருவேப்பிலை - சிறிதளவு,
பச்சை மிளகாய் - (பொடியாக நறுக்கியது) 4
பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெலிசாக வெட்டிக் கொள்ளவும்)
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - சிறிது
மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு
உருளைக்கிழங்கு - தேவைக்கேற்ப (வேகவைத்து தோல் நீக்கியது).
செய்முறை
கடாயை வைத்து, அடுப்பை பற்ற வைக்கவும். அதில், எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர், கடுகு மற்றும் கடலைப்பருப்பை சேர்த்து பருப்பு சிவந்தவுடன் அதில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். பச்சை மிளகாய் சிறிது வதங்கியவுடன் வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
இதையும் படிங்க: "ஒற்றுமையே பலம்" - துப்பாக்கியுடன் நுழைந்த திருடனை விரட்டிப்பிடித்த மக்கள்..!
இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதன் பச்சை வாசனை முற்றிலுமாக போன பின்னர் மஞ்சள் தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறி வாசனை வர ஆரம்பிக்கும். அப்பொழுது வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மசாலா அனைத்தும் உருளைக்கிழங்கில் கலக்குமாறு அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு நன்றாக வதக்கி ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தி விடவும். இப்போது, சுவையான பூரி மசாலா ரெடி.
இதையும் படிங்க: வலியுடன் தாம்பத்தியமா? காரணம் என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!