14 மாவட்டங்களில் வெளுத்தது வாங்கும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் இன்று தென்மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நள்ளிரவு முதல் காலை வேலையை கடந்தும் மழை தொடர்ந்து வந்ததது.
தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை
அடுத்த 5 நாட்களுக்கும் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேரிடர் மீட்பு படையினர் எந்நேரமும் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளியே படுத்திருக்கீங்களா?.. இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
இரவு 7 மணிவரை கீழ்காணும் மாவட்டங்களில் மழை
இந்நிலையில், இன்று இரவு 7 மணிவரையில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BigBreaking: 14 மாவட்டத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!