மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை ஏமாற்றி திருமணம், பலாத்காரம்.. தூக்கில் தொங்கிய தந்தை, காதலால் உருக்குலைந்த குடும்பம்.! கயவன் கைது.!
பள்ளியில் படித்து வந்த சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று கார் ஓட்டுநர் திருமணம் செய்ததால், போக்ஸோவில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள கொளத்தூர், கண்ணகி நகரை சேர்ந்த 47 வயது நபர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், மகன் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இவரின் இரண்டாவது மகளான பனிரெண்டாம் வகுப்பு மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாயமானார். இந்த விஷயம் தொடர்பாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை அப்பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் குமார் (வயது 26) என்பவர், ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்தது அம்பலமானது. இந்த தகவலை அறிந்த சிறுமியின் தந்தை வீட்டிலேயே தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதனையடுத்து, இவ்வழக்கு விசாரணை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, காவல் துறையினர் சிறுமி மற்றும் குமாரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் சிறுமி தனது வீட்டிற்கு வந்த நிலையில், காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர், அரக்கோணத்தில் பதுங்கியிருந்த குமார் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய குமார், அவரிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததும், அதனை பயன்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததும் அம்பலமானது. இதனால் குமாரின் மீது போக்ஸோ உட்பட 4 க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.