மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8 பெண்களுடன்.., குடியிருப்பு வீட்டில் நடந்த பலான தொழில்.. அதிரடியாக நுழைந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி...!
குடியிருப்பு பகுதியில் விபச்சார தொழில் நடத்திய 3 பேர் மற்றும் 8 அழகிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சார தொழில் நடைபெற்று வருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டபோது, நிகழ்விடத்தில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புக்குள் நேரடியாக புகுந்த காவல்துறையினர் பெண் தரகர் ஜான்சி (வயது 32), சூர்யா (வயது 24), குமார் (வயது 34) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக வைத்திருந்த 8 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அத்துடன் தரகரான ஜான்சியின் மீது பாலியல் குற்றம் தொடர்பாக பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தற்போது வெளியே வந்து தனது பணியை தொடங்கியுள்ளார்.